நவதானிய தோசை...
தேவையான பொருட்கள்:
பாசிப்பயறு - கால் கப்
கருப்பு உளுத்தம்பருப்பு - கால் கப்
கொண்டைக்கடலை -கால் கப்
பச்சரிசி -கால் கப்
துவரம்பருப்பு -கால் கப்
கொள்ளு -கால் கப்
சோயா -கால் கப்
வெள்ளை சோளம் -கால் கப்
எள்ளு -ஒரு டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் -3
காய்ந்த மிளகாய் -6
இஞ்சி -ஒரு துண்டு
தேங்காய் துருவல் -ஒரு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை -சிறிது
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்துமல்லி -சிறிதளவு.
செய்முறை:
எல்லா தானியங்களையும் ஒன்றாக போட்டு நன்றாகக் களைந்து சுமார் 5 மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊறிய பிறகு தானியங்கள், தேங்காய் துருவல், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு இவற்றைச் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
பொடியாக அரிந்த கொத்துமல்லியை சேர்த்து மெல்லிய தோசைகளாக வார்த்து எடுக்கவும்.
இஞ்சி சேர்ப்பதால் எளிதில் ஜீரணமாகும்.
0 comments:
Post a Comment